குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து
குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் இருந்த 3 கடற்றொழில் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.
'துஷானி' என்ற படகிலே தீ பரவியதாகவும், தீயினால் படகு முற்றாக எரிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எரிவாயு கசிவு
இந்த தீயினால் படகுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீண்டநாள் கடற்றொழில் படகு உள்ளிட்ட சிறிய படகொன்றும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், தீ விபத்தானது எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
