கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து - மக்களை மீட்க போராட்டம்
கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீயணைப்பு வாகனங்கள்
தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் தளங்களில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக இரண்டு skylift வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இருப்பினும், தீ விபத்து காரணமாக வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால், தற்போது இந்த skylift வாகனங்களைப் பயன்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீ விபத்துக்குள்ளான கட்டடத்தொகுதியில் வெளிநாட்டர்களும் தங்கியிருந்துள்ளதாகவும் அவர்களையும் மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri