நுவரெலியாவிலுள்ள ஹோட்டலொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
நுவரெலியாவிலுள்ள ஹோட்டலொன்றில் பாவித்த பொருட்களை சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் பெருமளவான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தீப்பரவல் நேற்று (06) வியாழக்கிழமை மாலை ஏற்பட்டுள்ளது.
குறித்த அறையில் தீப்பரவல் ஏற்பட்ட போது தீயை கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை சில மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவல்
இந்த தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

எனினும் குறித்து அறையில் வைக்கப்பட்டிருந்த சமையல் உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri