களுத்துறையில் தீ விபத்து: முற்றாக எரிந்து நாசமான வீடு
களுத்துறை(Kalutara) - வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று(11) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து
இந்த விபத்தின்போது அந்த வீடு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |