அல்லைப்பிட்டியில் நடந்த தீ விபத்து - பல ஏக்கர் புற்றரை எரிந்து நாசம்!
அல்லைப்பிட்டி - மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதருக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ மூட்டிய காரணத்தினால் அங்கிருந்த புற்றரைகள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(27.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள
தீ வேகமாக பரவிய காரணத்தினால் உருவான புகை வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தீ பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை
ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் வீதியின் பிரதான போக்குவரத்து வீதியில் இவ்வாறு தீ பரவுவதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் கொண்டு வந்து தீயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வெப்பமான காலனிலையால் நீர் வளம் வேகமாக வற்றி வரும் நிலையில் புற்களும் சருகாகி, வேகமாக தீ பரவியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தீமூட்டல் செயல்களை செய்வோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

