லயன் குடியிருப்பில் திடீர் தீப்பரவல் (Video)
தலவாக்கலை லிந்துலை ராணிவத்த தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீடீர் தீயினால் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (04.01.2024) காலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச வாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனால் ஏற்படவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய பொருட்கள் தீயில் சேதம்
இந்த தீயின் காரணமாக வீட்டில் இருந்த பெருமதி மிக்க பொருட்கள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் மற்றும் சிவில் ஆவணங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த வீட்டில் இருந்த 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |