ரஷ்ய - பின்லாந்து எல்லைகளில் தடுப்புச் சுவர் அமைக்க பின்லாந்து திட்டம்
ரஷ்ய - பின்லாந்து நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவுடன் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அமைப்பது குறித்து அதன் எல்லைப் பாதுகாப்பு சட்டங்களில் திருத்தங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது.
பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உக்ரைன் ரஷ்யா போரினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இருநாடுகளும் மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ள நிலையில்,இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுமார் 1,300 கிமீ வனப்பகுதி நிறைந்த எல்லைகளை ரஷ்யாவுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளுக்கு தஞ்சம் தேடுவோர்களை அதிகப்படியாக அனுப்பி வைத்து புதிய அழுத்தத்தை ரஷ்யா ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் இந்த பாதுகாப்பு சட்ட திருத்தத்தை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
