துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா! பட்டினியால் வாடும் இலட்சக்கணக்கான மக்கள்
துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் கோதுமை, சோளம், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 100 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன.
ஏவுகணைகள், குண்டுகளை வீசி உக்ரைனை அழிக்கும் ரஷ்யா
இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருவதுடன், உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினரின் ஏவுகணைகள் குண்டு வீசி அழித்து வருகின்றன.
இதனிடையே உக்ரைனின் துறைமுகங்களை குறிவைத்து ரஷ்யா தாக்கி அழித்து வருகின்றதுடன், இதன் காரணமாக உக்ரைனில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்,இலட்சக்கணக்கான மக்கள் பட்டிணியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.