மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்கும் உக்ரைன்! ரஷ்யா தகவல்
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக ரஷ்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில்,உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. மேலும், சிரியாவின் இட்லிப் நகரம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல்
வியன்னாவில் நடைபெற்ற இராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா பங்கேற்று உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்று எச்சரித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
