இலங்கையில் கைரேகை மாற்று சத்திர சிகிச்சை: நால்வர் கைது
சட்டவிரோதமான முறையில் குவைத் நாட்டுக்கு விசா பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் கைரேகை மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டமை குறித்து இந்திய பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வேலை வாய்ப்புக்காக குவைத் நாட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்காக கைரேகைகளை மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்ட மோசடியை தெலுங்கானா பொலிஸார் அண்மையில் முறியடித்துள்ளனர்.
இதன்போது புதிதாக குவைத் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக கைரேகையை மாற்றிய இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைரேகை மாற்று அறுவை சிகிச்சை
குவைத்தில் சட்டவிரோதமாக விசா காலத்தை மீறித் தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்டவர்களை மீண்டும் அங்கு செல்வதற்காக இந்த குழு சட்டவிரோத கைரேகை மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருமானம் ஈட்டும் திட்டம்
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவ துணைப்பணியாளர் ஒருவர், குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர், மீண்டும் குவைத்துக்கு சென்று பணி செய்வதற்காக இலங்கையில் கைரேகை மாற்றுச் சிகிச்சையை மேற்கொண்டமையை அறிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தாமும் இந்த கைரேகை மாற்று சிகிச்சைகளை வருமான ஈட்டும் வகையில் மேற்கொண்டு வந்ததாக அவர் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிகிச்சைக்காக ஒருவருக்கு 25000 ரூபா வரையில் அறிவிடப்பட்டதாக கைது செய்யப்பட்டவர் விசாரணையின் போது தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri