மாங்குளத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம்
மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் ,கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு , மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று கடந்த 06.08.2025 அன்று மேற்காெள்ளப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற சுகாதார குறைபாடுகளுடன் மற்றும் புழுப்பிடித்த , வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அழிப்பு செய்யப்பட்டதுடன் நேற்றையதினம் (20) மாங்குளம் மேலதிக நீதவான் நீதிமன்றில் உணவகங்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடுமையான எச்சரிக்கை
குறித்த வழக்கானது மாங்குளம் மேலதிக நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்கண்டு மொத்தமாக 240,000ரூபா தண்டம் விதித்ததுடன் மாங்குளம் பகுதியில் உள்ள இரண்டு கடைகள் சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யும் வரை மூடுமாறும் உத்தரவிட்டதோடு கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன் ,வைத்தியர் சஞ்சீவன் ஆகியோர்களின் ஆலோசனையில் மாங்குளம் பொது சுகாதார பரிசோதகரான நதிருசன், முத்தையன்கட்டு பொதுச்சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பொதுசுகாதார பரிசோதகர் டிலக்சன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
