எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால் ஆட்சிக்காக புதிய அணியை தேடுங்கள்: கோட்டாபய அறிவிப்பு
தன் மீது மாத்திரமல்லாது தனது அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என்றால், மீண்டும் பழைய அணியை ஆட்சிக்கு கொண்டு வராது புதிய அணியை தேடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய அறிவியல் தினம் மற்றும் அறிவியல் வாரம் தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி தோல்வியடைந்ததால், நான் ஆட்சிக்கு தெரிவு செய்யப்பட்டேன். இந்த அணி ஆட்சிக்கு வந்தும் எதுவும் நடக்கவில்லை என்பது போல் பேசுகின்றனர்.
தற்போது எனது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி செய்து தோல்வியடைந்தன் காரணமாகவே நான் இந்த இடத்திற்கு தெரிவானேன்.
எனினும் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், எவ்வித அதிகாரங்களும் இருக்காதவர்கள் போல் பேசி வருகின்றனர். மக்கள் இந்த முறைமையை மாற்ற வேண்டும்.
நானோ, என்னிடமோ, எனது அரசாங்கத்தின் அமைச்சர்களிடமோ எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என்றால், மீண்டும் அந்த பழைய அணியினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டாம். புதியவர்களை தேடுங்கள். அதனை எப்படி செய்வது என்று எனக்கு தெரியாது.
நாம் அனைவரும் இணைந்து சிறந்த ஒன்றை செய்வோம் என்றால், அதற்கான அனைவரும் நாட்டுக்காக இணைந்து செய்ய வேண்டும். எதிர்க்கட்சியும் இதனையே கூறுகிறது. இதனையே நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam