வீட்டுத்தோட்ட உரிமையாளர்களுக்கு 2 இலட்சம் ரூபாய்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வீட்டுத் தோட்டங்களுக்கு நிதியுதவியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி
அதன்படி, பத்து பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்போகத்தில் 3.6 மெட்ரிக் டன் விளைச்சலைப் பெற்றுகொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 2.4 மில்லியன் மெட்ரிக் டன்களாகும். சில மாகாணங்களில் சிறந்த அறுவடை கிடைப்பதுடன், இந்த விளைச்சலுக்காக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

வறட்சி ஏற்படுமென எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் வறட்சி ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் நீரை முடிந்த வரையில் சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுபோகத்தில் 5 இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேயரில் விளைச்சலை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதுடன், மேலதிக விளைச்சல் குறித்து அக்கறை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோளம், கோதுமை, உருளைக் கிழங்கு போன்ற விளைச்சல்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri