இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்! - பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை
வீடுகளை நிர்மாணிப்பதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப்புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக நுகேகொட பிரிவிலுள்ள மிரிஹான விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு 14 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கடன் வசதிகள் மற்றும் நிர்மாண சேவைகள் மூலம் தமக்கு வீடு வழங்குவதாக கூறி 19,215,000 ரூபாவை சந்தேகநபர் ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் நுகேகொட பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை 071-8591641 அல்லது விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி 011-2852556 அல்லது 071-8137373 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)