முன்னாள் அமைச்சருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று(13.05.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகக் கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றப்பத்திரிகையில், 2014 - 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு விசாரணைகளை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam