அடுத்தடுத்து இலங்கைக்கு வரவுள்ள சர்வதேச நிதி உயர்மட்டக் குழுவினர்
சர்வதேச நிதியங்களின் உயர்மட்டக் குழுவினர் அடுத்தடுத்து இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வருகின்றார். அவர் 18 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு
இந்த விஜயத்தின்போது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5 மற்றும் 6 ஆவது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலக வங்கிப் பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர். 2022 - 2023 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகின்றது.
குறித்த திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் ஆகியோர் ஏற்கனவே திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam