திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - ஆரம்பமான பிரேதப்பரிசோதனை
புதிய இணைப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் பிரேதப்பரிசோதனை தற்போது குளியாபிட்டிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டு வருகின்றது.
பிரேதப்பரிசோதனையை நடத்துவதற்காக நான்கு தடயவியல் வைத்திய நிபுணர்களை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்த நிலையில், மூன்று தடயவியல் வைத்திய நிபுணர்கள் தற்போது பிரேதப் பரிசோதனையை நடத்தி வருவதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயம்
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக, இந்த அதிகாரி உட்பட நான்கு பேரின் பணிகளை இடைநீக்கம் செய்ய நிதி அமைச்சகம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் வெட்டு காயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரி வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்ததாகவும், இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இறந்தவரின் உடலில் கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும், அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்க விரிவான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சடலம் மீதான பிரேத பரிசோதனை
சடலம் மீதான பிரேத பரிசோதனைக்குப் பிறகு விசாரணையின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அதிகாரியிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய விசாரணைத்திணைக்களங்கள் தயாராகி வந்ததாகவும், சம்பந்தப்பட்ட பணம் காணாமல்போனது குறித்து இந்த அதிகாரிக்கு நன்கு தெரியும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி அவர் சம்பந்தப்பட்ட துறைகளிடம் முறைப்பாடு அளித்திருந்தார் என்றும் சில சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam