இலங்கையின் நிதியமைச்சரிடம் மந்திர கோல்?
பொருளாதார நெருக்கடியில் உள்ள ஒரு ஏழைக் குடும்பம் தமது குழந்தைகளை விபச்சாரம் நடத்துபவர்களுக்கும், மனித கடத்தல்காரர்களுக்கும் விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதற்கும், இலங்கையின் நிதியமைச்சர், 300,000 குடிமக்களை ஜப்பான், கொரியா, ருமேனியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து $8 பில்லியன் பணத்தைப் பெறுவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலிய மூர்டொக் பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர் கலாநிதி அமீர் அலி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
குறித்த பொதுமக்களை ஏற்றுமதி செய்வதில் வெற்றிபெற முடியும் என்று இலங்கையின் நிதியமைச்சர் கருதினாலும், எதிர்பார்க்கப்படும் $8 பில்லியன் பணம் இலங்கைக்கு அனுப்பப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உழைக்கின்றவர்கள், கறுப்புச் சந்தையில் இருந்து தமது வெளிநாட்டு நாணயங்களுக்காக சிறந்த விலையைப் பெறும்போது, தாம் சம்பாதித்த டொலர்களை, குறைந்த விலையை கொண்ட வெளிநாட்டு நாணயத்திற்கான கறுப்புச் சந்தை ஒன்றை உருவாக்கிய இலங்கை மத்திய வங்கியின் சட்ட வழிகள் மூலம் ஏன் அனுப்ப வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
இங்கு பொதுமக்களின் சுயநலம் பொருளாதார நடத்தையை கட்டுப்படுத்துகிறது என்றும் கலாநிதி அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது 1.2 பில்லியன் டொலர்கள் மட்டுமே வெளிநாட்டு கையிருப்பில் உள்ளன. அதிசயங்கள் நடக்காத பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் அது வேகமாகக் குறைந்துவிடும்.
மேலும் மொத்த தேசிய உற்பத்தியை விட தேசியக் கடன் அதிகமாகும்,
இந்தநிலையில், தனது அரசாங்கம் கடன் இல்லா தேசத்தை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைக்கும் என்று நிதி அமைச்சர் உறுதியளித்தது மர்மமாக உள்ளது. அவரிடம் அல்லது அவரது தலைவரிடம் அல்லது அவர்களின் மத்திய வங்கி தலைவரிடம் மந்திரக்கோல் இருக்கிறதா? என்றும் அமீர் அலி வினவியுள்ளார்.
இதேவேளை இலங்கை தேசத்தை கடனில் இருந்து விடுவிப்பதற்கும், பணமதிப்பிழப்பு ஆபத்தைத் தடுப்பதற்கும், நிலையான தேசியத் திட்டங்கள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் பொருளாதார வல்லுநர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை என்பது விந்தையானது என்று கலாநிதி அமீர் அலி தெரிவித்துள்ளார்.





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

மாறுங்கள், இல்லையென்றால்... இங்கிலாந்து மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை News Lankasri
