நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உலோகங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் உலோகங்களை ஏற்றுமதி செய்பவர்கள் கைத்தொழில் அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என அறிவித்துள்ளார்.
ஏற்றுமதி
உலோகம் தொடர்பான தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
உலோக கழிவுகள், இரும்பு தொடர்பான உபகரணங்கள் மற்றும் செம்பு, பித்தளை, அலுமினியம், சீனாவேர் மற்றும் வெள்ளை இரும்பு போன்ற குப்பை பொருட்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதனால் ஏற்பட்ட நிதி இழப்புகள் குறித்தும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நிதி இழப்புகள்
உலோகம், இரும்பு, அது தொடர்பான உபகரணங்கள் மற்றும் பழைய பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள உலோகம் தொடர்பான ஏற்றுமதிகள் மற்றும் ஏற்றுமதி நிலைமைகளுக்கு ஏற்ற பொருட்களை அடையாளம் காணும் வகையில் எதிர்வரும் காலங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அனைத்து சட்டவிரோத மீள் ஏற்றுமதிகளும் நிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
