செப்டம்பர் 22 இறுதித் தீர்ப்பு: வைத்தியர்களுடன் போலி நாடகமா..! சுரேஷ் சலேவுக்கு கடும் அழுத்தம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, 100 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பது போலி நாடகமா என்ற கேள்வியையும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி திலீப பீரிஸ் எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சிறையில் இருந்தவர்களையும் விடுதலை செய்து, தேசத்திற்கு பெரும் அநீதி இழைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜபக்சர்கள் அரங்கேற்றும் போலி நாடகங்கள்
இலங்கையில் இருந்த வளங்களை கொள்ளையடித்த ராஜபக்சர்கள், தற்போது மேடைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், செப்டம்பர் 22ஆம் திகதி குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள முக்கிய குற்றவியல் வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுரேஷ் சலே வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இவ்வாறான நிலையில், சுரேஷ் சலேவின் வைத்தியசாலை தங்கல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதுபோன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Insight நிகழ்ச்சி,