கடனாளர்களிடமிருந்து சான்றிதழை வழங்குவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது: ஷெஹான் சேமசிங்க
இலங்கை தனது கடனை மறுசீரமைப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு, கடன் வழங்குநர்களிடமிருந்து சான்றிதழை வழங்கும் இறுதி கட்டத்தில் உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக விடுவிப்பதற்காக இலங்கை தனது பிரதான கடன் வழங்குநர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்குள் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் சபையின் அனுமதியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று சேமசிங்க கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு தேவையான
அனைத்து நடவடிக்கை முதல் காலாண்டிற்குள் குழுவின் ஒப்புதலைப்பெறும் அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
