இறுதி நாட்களை நோக்கி நகரும் தேசபந்துவின் பதவி காலம்...!
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் உயர் மட்ட குழு, தமது சாட்சியப் பதிவுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில், அவர், நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று தீர்மானிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயர்மட்ட குழு விசாரணை
இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உயர்மட்டக் குழு, சாட்சிய அமர்வுகளை நேற்று நிறைவு செய்தது.
இதனையடுத்து 2025 ஜூலை 8ஆம் திகதி அனைத்து தரப்பினரும் எழுத்துமூலம் சமர்ப்பிப்புக்களை சமர்ப்பிக்கவும், அது காலக்கெடுவை விதித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, தலைமையில், இந்த உயர்மட்ட குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
