நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (photos)
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாடளாவிய ரீதியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (21.01.2023) கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலை செய்துள்ளது.
உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் இன்று (21.01.2023) காலை 9 மணியளவில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
இதன்போது உமாச்சந்திரா பிரகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்துள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (21.01.2023) வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் இன்று (21.01.2023) யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசிய கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது.
மேலும் நல்லூரில் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள
12 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தமிழ் மக்கள் கூட்டணி வேட்புமனுவை தாக்கல்
செய்துள்ளது.
செய்தி: தீபன், எரிமலை
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை நகர சபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை சமத்துவ கட்சி இன்று தாக்கல் செய்தது.
கிளிநொச்சி
தனபாலசிங்கம் சுதாகரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி இன்று (21.01.2023) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இதன் போது, கரைச்சி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கையளித்ததாக தனபாலசிங்கம் சுதாகரன் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
சமத்துவ கட்சி இன்று (21.01.2023) கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கையளிக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு சதாசிவம் இராமநாதன் தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கிளிநொச்சியில் 11 அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2023 இல் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை 11 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக்குழுக்களும் தாக்கல் செய்துள்ளன.
கரைச்சி பிரதேச சபைக்கு 11 அரசியல் கட்சியும் ஒரு சுயேச்சைக்குழுவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு பத்து கட்சிகளும், ஒரு சுயேச்சைக்குழுவும், பூநகரி பிரதேச சபைக்கு ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
அந்த வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி, சமத்துவக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ,ஈழமக்கள் ஐனநாயக கட்சி, ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்கள் இரண்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று (21.01.2023) வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஐனநாயக கட்சி இன்று (21.01.2023) வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே
இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
செய்தி: ஷான், திலீபன்
அம்பாறை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கத் தமிழ் அரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம் வேட்புமனு கையளிப்புச் செய்தது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களே இன்று கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-நவோஜ்
சமத்துவக் கட்சி
சமத்துவக் கட்சி இன்று கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 7 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி கிளிநொச்சியில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கும், யாழ்ப்பாணம் பருத்திதுறை நகர சபைக்கும் வவுனியாவில் வெங்கல செட்டிக்குளம் மற்றும் வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துனுக்காய் பிரதேச சபைக்கும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது.
மட்டக்களப்பு
இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரச கட்சி ஸ்ரீலங்கா , முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் இன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இன்றுடன் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் நிறைவுற உள்ள நிலையில் பிரபலமான கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் இன்றைய தினம் தங்களது வேட்ப்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றது.
வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட அதே நேரம் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய தினம் ஈரோஸ் கட்சியானது வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் கடந்த நிலையில் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த நிலையில் அவர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.



பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
