காணாமல் போயுள்ள ரணில் கால முக்கிய கோப்புகள்
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கிய ஊழல் எதிர்ப்பு குழு அலுவலகத்திலிருந்து, பல கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, நேற்று(06.06.2025) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், முறைப்பாட்டு பதிவுகள் மற்றும் குழுவின் உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பான கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணவில்லை என்று கூறினார்.
ஊழல் எதிர்ப்புக் குழு
“கோப்புகளுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 2022இல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, அவற்றை அகற்றினாரா என்பது எங்களுக்குத் தெரியாது,” என்றும் பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்புக் குழு 2015இல் அமைச்சரவை ஒப்புதலுடன் நிறுவப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதன் தலைவராக பணியாற்றினார்.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் குழுவின் உறுப்பினராக இருந்தார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam