மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி வழக்கு தாக்கல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 72 பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த 72 பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டிருந்தன.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் குறித்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பாக ஆஜாராகியுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
