திருமண வீட்டில் நடந்த விபரீதம் - இருவர் வைத்தியசாலையில்
மாத்தறை கெகுணதுர பகுதியில் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் நடத்திய விசாரணையில், மோதலின் போது மணமகனால் தாக்கப்பட்டதில் மணப்பெண்ணின் சகோதரருக்கு கால் முறிந்தது தெரியவந்தது.
திருமண விருந்தின் போது மாலையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த மோதலுக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலுக்கான காரணம்
மோதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் வீரகெட்டிய பகுதியில் வசிக்கும் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam