தைப்பொங்கல் தினத்தில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 15 பேர் படுகாயம்!
வவுனியாவில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 12 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவங்கள் தைப்பொங்கல் தினமான நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவங்கள் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா பூந்தோட்டம், புளியங்குளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் மாலை 04.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் பல்வேறு மோதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 15 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, ஈச்சங்குளம், புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam