இறுதிகட்ட சிகிச்சை பெறும் கால்பந்து உலகின் ஜாம்பவான்! சோகத்தில் ரசிகர்கள்
கால்பந்து உலகின் ஜாம்பவன் பீலேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில்,பீலேவிற்கு இறுதி கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த செப்டெம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
கால்பந்து உலகின் ஜாம்பவான்
இந்நிலையில் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை பலவீனமடைந்து வந்துள்ளது.
இதனால் செவ்வாய் கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்துள்ளது.
தற்போது, 81 வயதாகும் பீலேவின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் 'பலியேட்டிவ் கேர்' எனப்படும் இறுதிகட்ட சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை
வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சையாக பார்க்கப்படும் இது உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் நோய்களுக்கு அளிக்கப்படுவதாகும்.
அத்துடன், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் கீமோதெரபி சிகிச்சை நிறுத்தப்பட்டு, வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்.
இதேவேளை நோய்த்தடுப்பு சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
பீலேவின் உடல் நிலை தொடர்பில் தகவல் வெளியானது முதல் கால்பந்து உலகம் சோகத்தில் மூழ்கி உள்ளது.