உலக கோப்பை கால்பந்து! போப் பிரான்சிஸ் வெளியிட்ட தகவல்
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நடைபெற்று வரும் உலக கோப்பையை உற்சாகப்படுத்தியதுடன், கத்தார் போட்டி உலகில் நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம்

பொது பார்வையாளர்களின் முன்னிலையில் தனது வாராந்திர சந்திப்பில் பேசிய பிரான்சிஸ், கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் பார்வையாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான நிகழ்வு, நாடுகளின் சந்திப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கட்டும். மக்களிடையே சகோதரத்துவத்தையும் அமைதியையும் ஆதரிக்கட்டும். உலகில் அமைதி நிலவவும், அனைத்து மோதல்களும் முடிவுக்கு வரவும் பிரார்த்தனை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri