உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் முதல் முறை நிகழ்ந்த விடயம்! ஏமாற்றத்தில் ரசிகர்கள்
2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில், தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் போட்டியை நடத்தும் கட்டார் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம்
இந்த விடயம் கட்டார் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உலகக் கிண்ண முதலாம் சுற்றில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற கட்டார் அணி உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 29ஆம் திகதி குழு ஏ இல் உள்ள நெதர்லாந்து அணியை கட்டார் அணி எதிர்கொள்ளவிருப்பதாக போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புள்ளிப் பட்டியலில் கடைசி இடம்
இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் குழு ஏ புள்ளிப் பட்டியலில் கட்டார் அணி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
இதனால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கிண்ணத் தொடரிலும் இருந்து வெளியேறியுள்ளது.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தமை இதுவே முதன்முறையாகும்.