வேலி அமைக்காமையால் வயலுக்கு கிடைக்காத நீர்! 2 ஏக்கர் பயிர் அழியும் நிலையில் - விவசாயி குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் குளத்திற்கு கீழ் சிறுபோக நெற்செய்கையில் ஈடுப்பட்டுள்ள தனக்கு விதைத்த நாள் தொடக்கம் இன்று வரை நீர் வழங்கப்படாத காரணத்தால் இரண்டு ஏக்கர் வயல் நில பயிர் அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.
கமக்கார அமைப்பும், கமநலசேவைகள் திணைக்களமும் தனக்கான சிறுபோக பங்கு நீரினை தர மறுத்து வருவதாகவும், பல தடவைகள் கேட்டும் வேலி அமைத்தால் மாத்திரமே நீர் வழங்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதால் வயல் எரிந்து அழியும் நிலையில் உள்ளது.
திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - ட்ரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
வேலி அமைப்பு
வேலி அமைக்காத பலருக்கு சிறுபோக நெற்செய்கைக்கு நீர் வழங்கப்படுகின்ற போதும் தனக்கு மாத்திரம் இவ்வாறு நடந்துள்ளதாகவும், இந்த நிலையில் தான் தற்போது வேலி அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு உடனடியாக தனது இரண்டு ஏக்கர் வயலுக்கு நீர் வழங்கப்படாவிடின் வயல் நிலம் முற்றுமுழுதாக அழிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பில் கமநல சேவைகள் திணைக்கள் அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விவசாயி தனது வயல் நிலத்திற்கான வேலியினை அமைக்குமாறு கமக்கார அமைப்பு மற்றும் கம விதானை ஆகியோர் கூறியும் அவர் அதனை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே நீர் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்து. இருப்பினும் சனிக்கிழமை பிற்பகல் அவருக்கு நீர் வழங்குவதற்குரிய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri