ஆட்டம் காணும் தங்கத்தின் விலை: நகை வாங்கவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (26.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,708.69 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரியவருவதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 75.69 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
டொலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், உலகளாவிய அரசியல் நகர்வுகளும் இந்த விலை மாற்றத்திற்குப் பிரதான காரணங்களாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் மாற்றம் ஏற்படலாம்
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றமானது இலங்கை சந்தையிலும் தங்கத்தின் விலையிலும் தளம்பல் நிலைமைக்கு வழிவகுக்கும் என பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் தங்கம் வாங்க காத்திருப்போர் தங்கத்தை கொள்வனவு செய்யும் போது விலை மாற்றங்களை அவதானத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam