மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
தற்போது சிறுவர்கள் மத்தியில் பல்வகை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்புளுவன்சா மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவையும் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால் வைத்தியரின் உதவியைப் பெறுவது அவசியமென அவர் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மேலும், இது தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பரவுகை அதிகரிக்கத் தொடங்கியுள்ள காரணத்தினால் மக்கள் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருந்தார்.
சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றல்

அத்துடன் பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், ஒரு மீட்டர் இடைவெளியை பேணுதல், கைகளை கழுவிக் கொள்ளல் மற்றும் கை சுத்திகரிப்பான் பயன்படுத்தல் போன்ற பழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், இந்த நாட்களில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் காரணத்தினால் அந்த துறையுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுவோர் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியமானது என டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam