வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பம்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (31) ஆரம்பமானது.
திருக்கோணேச்சரம் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறையில் எடுத்து வரப்பட்டு தீர்த்தம் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ததைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம் பெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
விசேட பூஜைகள்
அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடி தம்பத்திற்கு முன் எழுந்தருளியதை அடுத்து கொடி தம்பத்திற்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.
சுப நேரத்தில் ஆலய பிரதம குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகள் இடம்பெற்று உற்சவ மூர்த்திகள் உள் வீதி உலா வந்தனர்.
தொடர்ந்து எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (8) திருத்தேர் திருவிழாவும் (09.06.2025) தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிபிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
