வரலாற்று தொன்மை மிக்க புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்
கிளிநொச்சி - கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் நேற்று (25-03-2026) பகல் 12 மணிக்கு விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகி பிரம்பு வழங்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் பக்த்தர்கள் யாழ். புத்தூர் பண்டமரவடிக்கு சென்றுள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் (01-04-2026) ஆம் திகதி இரவு நடைபெற உள்ளது.
ஆலய பூசை வழிபாடு
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த ஆலயத்தில் நேற்று பகல் 12 மணிக்கு பாரம்பரிய ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரம்பு வழங்கும் வைபவம் நடைபெற்றதையடுத்து யாழ். தென்மராட்சி புத்தூர் சந்தியிலுள்ள பண்டமரவடிக்கு சென்று பொங்கலுக்கான பண்டம் எடுத்து வரும் மரபுகளுக்கு அமைய பிற்பகல் மாட்டு வண்டிகளில் தொண்டர்கள் ஆலய முன்றலில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
தொன்றுதொட்டு பேணப்படும் மரபுகளுக்கு அமைவாக இவ்வாறு புறப்பட்ட இவர்கள் யாழ். மீசாலை புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பண்டமரவடிக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பொங்கலுக்கான பொருட்களை எடுத்து எதிர்வரும் முதலாம் திகதி ஆலயத்தை வந்தடைந்து அங்கே பொங்கல் வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

