ஆப்பிரிக்காவில் உரத் தட்டுப்பாடு: உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு, ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
உலகளாவிய உர வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நிச்சயமற்ற சூழல், ஆப்பிரிக்க விவசாயிகளுக்குத் தேவையான உர விநியோகத்தைப் பாதித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
உலக அளவில் வர்த்தகம் செய்யப்படும் அமோனியாவில் கால் பகுதியும், யூரியாவில் மூன்றில் ஒரு பங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
உரங்களின் விலை
ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா பகுதியில் பயன்படுத்தப்படும் உரங்களில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுபவை.
தற்போதைய போரினால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உரக் கிடைப்பனவு 10 சதவீதம் குறைந்தால் கூட, ஆப்பிரிக்காவில் மக்காச்சோளம், நெல் மற்றும் கோதுமை உற்பத்தி 25 சதவீதம் வரை குறையக்கூடும் என ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது.
உணவுப் பணவீக்கம்
இது கண்டம் முழுவதும் 8 சதவீத உணவுப் பணவீக்கத்தைத் தூண்டக்கூடும். ஆப்பிரிக்காவின் 70 சதவீத உணவுத் தேவையை சிறு குறு விவசாயிகளே பூர்த்தி செய்கின்றனர்.

பெரிய வணிக ரீதியான பண்ணைகளைப் போல இவர்களிடம் முன்கூட்டியே உரங்களை வாங்கி வைப்பதற்கான போதிய நிதி வசதி இல்லை. இதனால் உர விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டின் நேரடி பாதிப்பை இவர்களே அதிகம் எதிர்கொள்கின்றனர்.
எவ்வாறாயினும், ஒரு தொலைதூரக் கடல் பகுதியில் நடக்கும் போர், ஆப்பிரிக்காவின் சாதாரணக் குடும்பத்தின் உணவுத் தட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியின் பலவீனத்தையே காட்டுகிறது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam