கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் உர மானியம் இன்மையால் அம்பாறை உட்பட பல பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் தற்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பருவ கால விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தேவையான உரங்கள் கிடைக்காததால் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசால் வழங்கப்படும் உர மானியம்
அம்பாறை பிரதேசத்தில் இம்மாதப் பருவத்தில் நெற்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு அரசால் வழங்கப்படும் உர மானியம் வழங்கப்படாததால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிகத்துள்ளனர்.
இதேவேளை, நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள நெற்செய்கையாளர்களும் உர மானியம் கிடைக்காததால் நஷ்டமடைந்துள்ளனர்.
உரிய நேரத்தில் உரமிட முடியாததால், ஏலப் பயிர்ச்செய்கை அறுவடை கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
