ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரிகளை இலங்கை அரசாங்கம் வெளியிடுமா: இம்ரான் எம்.பி காட்டம்
ஈஸ்டர் குண்டு தாக்குதலின், சூத்திரதாரிகளை இலங்கை அரசாங்கம் வெளியிடுமா என்பது குறித்து தாம் எதிர்பார்த்துக் கொண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
மூதூர் கலாசார மண்டபத்தில் நேற்று (17) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் குண்டு தாக்குதலின், சூத்திரதாரிகளை வெளியிடுவோம் எனவும் ஜனாதிபதி கூறுகின்றார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்
இதற்காக இன்னும் இரண்டொரு தினங்களே உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் இவர்களால் அவற்றை செய்ய முடியுமா என்று.

தேர்தல் காலங்களில் மாத்திரம், இவர்கள் திருடர்களைப் பிடிக்க வேண்டும். சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் மேடைகளில் பேசித் திரிகின்ற இவர்களால், இன்னும் உருப்படியான வேலைகள் எதனையும் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.
ஊழல்
பண மோசடிகளை செய்கின்றவர்கள் மாத்திரம் திருடர்கள் அல்ல. இன்று தேசிய மக்கள் சக்தியின் கல்வியில் பட்டங்களை திருடியிருக்கின்றார்கள். அதுவும் ஊழல் தான்.

தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 156 பேரும் இன்னும் அவர்களுடைய கல்வி தகமையை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் எமது தலைவர் சஜித் பிரேமதாச மொண்டசிரியிலிருந்து உயர்கல்வி வரையும் அவருடைய தகைமையை பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தி இருக்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri