மஹரகம நகர சபையில் அடிதடியில் ஈடுபட்ட பெண் உறுப்பினர்கள்
மஹரகம நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் அந்த நகர சபையில் மற்றுமொரு பெண் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரான பெண் உறுப்பினர் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான உறுப்பினர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்குள்ளான உறுப்பினர் கர்ப்பிணி எனவும் சம்பவத்தின் பின்னர் அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட உறுப்பினர் 2 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



