கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தை பிரசவித்து பத்து நாட்களில் மரணம்
கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
குழந்தைக்குக் கோவிட் தொற்று உறுதியான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகின்றது.
கிளிநொச்சியைச் சேர்ந்த (வயது - 32) வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 15 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக கர்ப்பிணிப் பெண் சேர்க்கப்பட்டார். அவருக்குக் கோவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தாய் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கடந்த 26ஆம் திகதி மாற்றப்பட்டார்.எனினும், சிகிச்சை பயனின்றி தாயார் இன்று உயிரிழந்தார்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பெண்ணின் சடலத்தை சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam