வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இரண்டு பெண்கள் கைது! அதிகாரிகளிடம் சிக்கிய ஆபத்தான பொதி
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப்பெண் பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (28) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன நாட்டை சேர்ந்த 30 மற்றும் 35 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையச்சுங்க அதிகாரிகள் விசாரணை
இவர்கள் சீனாவில் சிகரெட்டுகளை கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சென்றடைந்து, அங்கிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச் -497 என்ற விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கொண்டுவந்த 4 பயணப்பைகளை பரிசோதித்தபோது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரு சீன பெண்களும் சுங்க பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலையச்சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.