தூதரகங்களாகும் அரச அமைச்சர் பங்களாக்கள்! இறுதிக்கட்டத்தில் ஒதுக்கீடு பணிகள்
கொழும்பில் உள்ள ஒன்பது அமைச்சர் பங்களாக்களை தூதரகங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்பது தூதரகங்கள் சில காலமாக அமைச்சர் பங்களாக்களை கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தவிர, வர்த்தக நடவடிக்கைகளுக்காக மேலும் ஆறு அமைச்சர் பங்களாக்களை ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பிரதான நோக்கம்
இதன்படி, நீதிமன்றங்களை நிறுவுவதற்கான தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் அமைச்சர் பங்களாக்களை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சர்களுக்காக எந்த அமைச்சர் பங்களாக்களையும் பயன்படுத்தக்கூடாது என்று அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்காததால், அவற்றிலிருந்து வருவாய் ஈட்டுவதும், பொருளாதார ரீதியாகப் பயனுள்ள திட்டங்களுக்கு அவற்றை பயன்படுத்துவதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மூன்று அமைச்சர் பங்களாக்களில் சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மற்றொரு அமைச்சர் பங்களாக்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.