வறண்ட வானிலை - தொடர்ந்து குறையும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம்
தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
அதன்படி, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேநேரத்தில் ஹுருலு வேவாவின் நீர்மட்டம் 24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
குறைந்துள்ள நீர் கொள்ளளவு
மேலும், அதிமலை வேவாவின் நீர் கொள்ளளவு 5 சதவீதமும், மோரா வேவாவின் நீர் கொள்ளளவு 9 சதவீதமும், வெஹரகல நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 15 சதவீதமும், கௌடுல்ல வேவாவின் நீர் கொள்ளளவு 20 சதவீதமும், பதாவியா வேவாவின் நீர் கொள்ளளவு 22 சதவீதமும், தப்போவ வேவாவின் நீர் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இலங்கையின் பல மாவட்டங்களில் மனித உடல் உணரும் வெப்பம் இன்று கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் பாகையாக பதிவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.