மொட்டுக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் சக எம்.பிக்கள் - செய்திகளின் தொகுப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட, கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் மாவட்டத்தின் மூன்று தலைவர்கள் பங்கேற்கவில்லை என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தரத்வத்தவின் வீட்டில் நேற்று முன்தினம் (12.07.2023) இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களானதிலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல்வாதிகள்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தின் மூலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |