நாளைய போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஆதரவு (Photos)
நாளை முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளனர்.
இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காகவும், எமது இளைய தலைமுறையை ஆராதிக்கவும் எமது போராட்டத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஒரு ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருகின்றோம்.
இப் போராட்டமானது மதியம் 12 மணியில் இருந்து 1.00 மணி வரை நடத்தப்படும். இந்த ஹர்த்தால்க்கு கொழும்பில் இருக்கின்ற ஐந்து பல்கலைக்கழகங்கள் தங்களது ஆதரவினை வழங்குகின்றன.
அதேசமயம் இலங்கையில் இருக்கின்ற அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்ற பல்கலைக்கழகங்கள் தங்களது பிரதேசங்களில் இருந்து இவ் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவர் என தெரிவித்துள்ளனர்.
இப் போராட்டத்தினை தாங்கள் “மனித சங்கிலி” என்ற தொணியில் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



