ரணிலுடன் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் - பிரதமர் அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இது விவாதம் செய்யும் நேரம் அல்ல நாட்டுக்காக - மக்களுக்காக கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலமே இது.
தமிழ்க் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றியுள்ளார். இந்த உரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த உரை.
எனவே, அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள சகல
வேலைத்திட்டங்களுக்கும் தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க
வேண்டும். அப்போதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை நாம் விரைந்து
காண முடியும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
