ஜனாதிபதியின் யாழ்.விஜயத்திற்கு எதிரான போராட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Jaffna Ranil Wickremesinghe Sri Lanka SL Protest Sri Lankan political crisis
By Chandramathi May 08, 2023 09:17 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தமை தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கும், ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கு செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

குறித்த இரு வழக்குகளும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் விசேடமாக சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை

மேலும் தெரிவிக்கையில்,“ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பாகவும், யாழில் கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தமை தொடர்பான இரு வழக்குகளும் இன்றைய தினம்(08.05.2023) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதியின் யாழ்.விஜயத்திற்கு எதிரான போராட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Feb 4 Black Day In Sri Lanka Political

கறுப்பு தினமாக அனுஷ்டித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், யாழ்.மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் மற்றும் வேலன்சுவாமிகள் ஆகியவர்களிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த தவணையில் பிணை வழங்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் வழக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நான் 1,2,4,7 ஆவது சந்தேகநபராக முன்னிலையாகி சில விடயங்களை எனது வாதத்தில் முன்வைத்தேன்.

அதில், கைது செய்யப்பட்டமைக்கு முதலறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்கள் என்றும் இதனால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் முன்வைத்திருந்தேன்.

அத்துடன் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாயின் பொலிஸாரிற்கு எதிராக நாமே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். மாறாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பொலிஸார் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறான ஒரு வழக்கினை தாக்கல் செய்து மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றுக்கு அழைத்தமைக்கு நாமே பொலிஸாரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும்.

பொலிஸார் எந்த விதமான முறைப்பாடுகளோ அல்லது சாட்சியத்தின் சுருக்கங்களோ இன்றி இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் கடந்த 3 மாதங்களாக எந்த விதமான புலன் விசாரணைகளும் இடம்பெறவில்லை. ஒரு வழக்கினை தாக்கல் செய்யும் பொழுது அந்த வழக்கின் விசாரணைகளை தொடரவே வழக்கு தாக்கல் செய்து திகதி வழங்கப்படுகின்றது.

அறிக்கை தாக்குதல்

அந்த விசாரணைக்கு மறுதவணை கொடுக்கும் பொழுது குறித்த காலத்திற்குள் செய்த விசாரணைகளுடைய மேலதிகயறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் பொலிஸார் எந்த வித மேலதிக அறிக்கையினையும் தாக்கல் செய்யவில்லை.

அதனால் காலம் நேரத்தினையும் சந்தேகநபர்கள் சமூக சேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த வழக்கினை கிடப்பில் போடுமாறு விண்ணப்பத்தில் மேல்வைத்தோம்.

ஜனாதிபதியின் யாழ்.விஜயத்திற்கு எதிரான போராட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Feb 4 Black Day In Sri Lanka Political

குறித்த விண்ணப்பத்தினை மேல் வைத்த அடிப்படையிலே இந்த வழக்கிற்கான தீர்ப்பினை வழங்குவதற்காக ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு குறித்த வழக்கினை ஒத்தி வைத்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியின் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களிற்கெதிராக முன்னிலையாகியிருந்தோம்.

அந்த வழக்கில் சந்தேகநபர்களை அதிகரித்து செய்வதால் அதனை விரைவாக முடித்து, சட்டமா திணைக்களத்திற்கு அனுப்பி வழக்கு ஒன்று இருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும் நீதிமன்றில் வேண்டுகொண்டோம்.

அத்துடன் காலதாமதமாக அழைக்குமாறும் வேண்டிக்கொண்டதை அடுத்து, இந்த வழக்கினை செப்டெம்பர் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US