சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பெருவிழா (Photo)
மன்னார், மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய வருடாந்த பெருவிழா திருப்பலி இன்று கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் தலைமையில் மன்னார், மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று மறைமாவட்ட ஆயரினால் திருச்சொரூப ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் கிராம மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்துக்கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக குறித்த ஆலயத்தின் திருவிழா கடந்த 2 வருடங்களாக இடம்பெறாத நிலையில் இவ்வருட திருவிழா சிறப்பாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |









அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
