கினியாவில் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் வெடித்த மோதல் : 100இற்கு மேற்பட்டோர் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் (Guinea ) இரு குழுக்களுக்கிடையில் நேற்றையதினம் (01) ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுமுறை தினமான நேற்று (01) கினியாவில் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது.
கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இரு அணி இரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
இரசிகர்கள் மைதானத்தில் முற்றுகை
இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கொல்லப்பட்டனர்.
🚨#BREAKING: At least 100 people have died due to clashes between two groups of supporters at a football match in Guinea. pic.twitter.com/Wbk34YCyNI
— Abdul khabir jamily (@JamilKhabir396) December 1, 2024
அத்துடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை தீ வைத்துள்ளதுடன், வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதாலே, கோபம் அடைந்த இரசிகர்கள் மைதானத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |