புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை அச்சத்திற்குள்ளாக்கும் விடயம்: மீண்டும் மீண்டும் விசாரணை

Democratic Party Sri Lanka Government Of Sri Lanka
By Navoj May 09, 2023 09:06 AM GMT
Report

விசாரணைகள் என்ற பெயரில் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு எதிர்வரும் 15ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயமானது ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளை அரசு இன்னும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்திலே பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை அச்சத்திற்குள்ளாக்கும் விடயம்: மீண்டும் மீண்டும் விசாரணை | Fear Of Militants In The Name Of Investigations

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணை

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு ஜனநாயக வழியில் செயற்படுகின்ற அமைப்புகளை மீளவும் அச்சுறுத்தும் வகையிலே அமைந்துள்ளது. இவ்வாறான இலங்கை அரசின் முடிவுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

ஒரு இனத்தின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற நிலையில் யுத்தத்தின் பின்னர் பொது வெளிச் செயற்பாடுகளில் ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற போராளிகள் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் தொடர்ந்து இவ்வாறான விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்ற விடயம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியில் ஒரு அரசியற் கட்சியாக அமைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்காக அழைப்பதென்பது புனர் வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் போராளிகள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் விடயமாகும்.

ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று

தற்போதைய முள்ளிவாய்க்கால் காலப் பகுதியில் இவ்வாறான அநீதியான விசாரணைச் செயற்பாடு ஜனநாயகத்தை நேசிக்கும் பலரையும் கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கையாகும். 

யுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் இருந்து ஜனநாயக வழியிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தரப்புகளை இலங்கையின் பயங்கரவாதப் பிரிவு விசாரணைக்கு அழைப்பது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, இலங்கை இராணுவம் ஏனைய புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாகப் போராளிகளின் வீடுகளுக்குச் செல்வதும், விசாரணை என்ற பெயரில் அழைப்பதும் ஒரு சுமுகமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்துகின்றது. 

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை அச்சத்திற்குள்ளாக்கும் விடயம்: மீண்டும் மீண்டும் விசாரணை | Fear Of Militants In The Name Of Investigations

ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் 

இந்த வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையிலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளைத் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாட்டை ஜனநாயக ரீதியாக நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இது போராளிகளின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான விசாரணைகள் மூலம் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், ஜனநாயக ரீதியில் அவர்களின் செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.

ஏனெனில் எமது மக்களுக்கானதும், போராளிகளுக்குமான ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்தே வருவோம். எனவே விசாரணைகள் என்ற பெயரில் இது போன்ற அச்சுறுத்தல்களை இலங்கை அரசு உடன் நிறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US